பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2-வது இடம்!!

இந்தியாவில் மக்களுக்கு பிடித்தமான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்திய விமானத்துறை ஆணையம் ஆண்டிற்கு இரு முறை நாடு முழுவதும் உள்ள 50 விமான நிலையங்களில் மட்டும் பயணிகள் சேவை எப்படியிருக்கிறது என்பது பற்றி சர்வே எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர் சேவை அடிப்படையில் பயணிகளுக்குப் பிடித்த விமானநிலையங்கள் பட்டியலில் முதல் இடத்தை உதய்பூர் விமான நிலையமும்,
5-க்கு 4.85 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மதுரை விமான நிலையம் 4.80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
மதுரையைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர் சேவையில், விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவது, டெர்மினலில் இருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வது, பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் எந்ததெந்த நேரத்தில் புறப்படும் விமானங்கள், தரையிரங்கும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகளை செய்வது, கார் பார்க்கிங் போன்றவை அதிக புள்ளிகள் பெறுவதற்கு சாதகமாக இருந்தன.ஆனால், உணவு வசதிகள், இண்டர்நெட் வசதி உள்ளிட்ட சில வசதிகள் புள்ளிகள் குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை