10 வருடங்களாக லாக்டவுனில் இருந்தேன் - வடிவேலு வருத்தம்!!

10 வருடங்களாக லாக்டவுனில் இருந்தேன் - வடிவேலு வருத்தம்!!
அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி வடிவேலு கண்கலங்கினார். 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகர் வடிவேலு
கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 
அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி வடிவேலு கண்கலங்கியிருந்தார். 

இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து தற்போது வடிவேலு இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா 40 படத்தில், அவருடன் இணைந்து காமெடி நடிகர் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதையடுத்து,  'எம்டன் மகன்' பட இயக்குனர் திருமுருகனின் அடுத்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும், வடிவேலுவும் இணைந்து நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

மேலும், நடிகர் வடிவேலு ஏற்கனவே சூர்யாவுடன், வேல், ஆறு, ஆதவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்