பார்வதி நாயருடன் இணையும் பிக் பாஸ் பிரபலம்!!

பார்வதி நாயருடன் இணையும் பிக் பாஸ் பிரபலம்!!
தமிழில் பல படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தற்போது பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழில் அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன் பிறகு உன்னைபோல் ஒருவன், கோ, இவன் வேறமாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கலந்துக் கொண்டு பிரபலம் ஆனார்.

தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் கணேஷ் வெங்கட்ராமன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதனை பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் வெளியாக உள்ளது.  ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் தொழில் அதிபராகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்