வடிவேலு சார் என் படத்துல நடிங்க.. நான் ரொம்ப பெருமை படுவேன்.. மீரா மிதுன் ஓபன் டாக்..!

வடிவேலு சார் என் படத்துல நடிங்க.. நான் ரொம்ப பெருமை படுவேன்.. மீரா மிதுன் ஓபன் டாக்..!

திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேல். இவர் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம் என்றும், எனது உடலில் தெம்பு இருக்கிறது,  நடிக்கவும் ஆசை இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என்று வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கியுள்ளார்.

இந்த‌ நிலையில், தற்போது நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார் என்றும், எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள் என்றும் அவர் கூறினார். 

ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது என்பது எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்று கூறியுள்ளார்.

மேலும், நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்