மீண்டும் இணைகிறதா மெர்சல் கூட்டணி?

மீண்டும் இணைகிறதா மெர்சல் கூட்டணி?
மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்ற நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய், அட்லீயுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

ஏற்கனவே விஜய்யை  வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை அட்லீ கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்