அறைக்குள் கூட்டிச் சென்ற வி.ஜே.பார்வதி: சர்ப்ரைஸ் கிஃப்டால் கண்கலங்கிய புகழ்!

அறைக்குள் கூட்டிச் சென்ற வி.ஜே.பார்வதி: சர்ப்ரைஸ் கிஃப்டால் கண்கலங்கிய புகழ்!

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த புகழை வி.ஜே.பார்வதி சர்ப்ரைஸ் செய்துள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகம். ஷகிலா, பாபா பாஸ்கர், பவித்ரா, அஸ்வின் உள்ளிட்ட போட்டியாளர்களும், சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, பாலா உள்ளிட்டவர்கள் கோமாளிகளாகவும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. 

குறிப்பாக புகழின் புகழைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவரும் சிவாங்கியும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும்.

ஒவ்வொரு முறையும் புகழுடன் ஜோடி சேரும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் படாத பாடு படுத்திவிடுகிறார். போன சீசனில் ரம்யா பாண்டியன் இந்த சீசனில் பவித்ரா லட்சுமி என புகழுடனான கெமிஸ்ட்ரி பக்காவாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையிஉல், குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்ட வி.ஜே.பார்வதி தற்போது புகழுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளார். 

புகழை அறைக்குள் கூட்டிச் சென்று பார்வதி கொடுத்த சர்ப்ரைஸால் அவர் கொஞ்சம் எமோஷனல் ஆகியிருக்கிறார். அந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ஃபேன்ஸ் பேஜ்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்