நேரடியாக டிவியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ’வணக்கம்டா மாப்ள’- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நேரடியாக டிவியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ’வணக்கம்டா மாப்ள’- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜி.வி.பிராகாஷ், அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியாக உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில், பிக் பாஸ் டேனியல், ஆனந்தராஜ், பிக் பாஸ் ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், முன்னணி தொலைக்காட்சியான சன் டிவி-யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் ஆப்பில் தேனியைச் சேர்ந்த ஒருவர் ‘வணக்கம்டா மாப்ள’ எனச் சொல்வது மக்களிடம் பிரபலமானது. அந்த வார்த்தையே இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்