பிகில் பட வில்லனுக்கு காவல்துறையில் பதவி உயர்வு: அட இவரா, அவரு?

பிகில் பட வில்லனுக்கு காவல்துறையில் பதவி உயர்வு: அட இவரா, அவரு?

பிகில் படத்தில் வில்லனாக நடித்த, நடிகர் ஐ.எம்.விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி சிறப்பித்துள்ளது. 

முன்னாள் இந்திய கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயன், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அடித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இவர் இந்திய கால் பந்து அணியின் முதல் Player Of the year என்ற பட்டத்தைப் பெற்ற வீரரும் ஆவார். இந்திய அணிக்காக 70-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 40 கோல்கள் அடித்த ஐ.எம்.விஜயன், 2003-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 300-க்கும் மேற்பட்ட கிளப் போட்டிகளிளும் விஜயன் விளையாடியுள்ளார்.

கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கேரள காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம்.விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில்  உள்ளிட்ட படங்களில்  வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டண்ட் ஆக பதவி உயர்வு வழங்கி உள்ளதாக விஜயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்