சூர்யா படத்தில் அருண் விஜய் மகன்; தந்தையாக இணைகிறார் அருண் விஜய்!!

சூர்யா படத்தில் அருண் விஜய் மகன்; தந்தையாக இணைகிறார் அருண் விஜய்!!
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும்
 8ஆவது படத்தில் நடிகர் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.இந்த படத்தில் அருண் விஜய்யும் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். 

குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படத்தை சரவ் சண்முகம் இயக்குகிறார். இதில் கோபிநாத் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார்.

இது குறித்து இயக்குநர்
 சரவ் சண்முகம் கூறும்போது, “ இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன என்று அவர் முன்பே கூறியிருந்தார். 

நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. 
ஒப்பந்தமாவதற்கு முன் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது” என கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

 • வரவேற்கக்கூடியது
  28.86%
 • தேர்தல்நேர அறிவிப்புகள்
  40.8%
 • கடன்சுமை அதிகரிக்கும்
  24.88%
 • கருத்தில்லை
  5.47%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்