காளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

காளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக  நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

அதேபோல்,வா குவாட்டர் கட்டிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காளி வெங்கட். இதையடுத்து, வெளியான முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர், பல்வேறு திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காளி வெங்கட் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு, நடிகை சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்