’சின்னக்குயில்’ சித்ராவுக்கு ‘பத்ம பூஷண்’ விருது: நன்றி தெரிவித்து பாடகி சித்ரா வீடியோ பதிவு..!

’சின்னக்குயில்’ சித்ராவுக்கு ‘பத்ம பூஷண்’ விருது: நன்றி தெரிவித்து பாடகி சித்ரா வீடியோ பதிவு..!

25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பல மொழிகளிலும் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி ’சின்னக்குயில்’ சித்ரா. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சினிமாத் துறையைச் சேர்ந்த பாடகி ’சின்னக்குயில்’ சித்ராவுக்கும் ‘பத்ம பூஷண்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நன்றி தெரிவித்து பாடகி சித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அரசு எனக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்னுடைய ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் அன்பால்தான் இது சாத்தியமானது என்றும், எனக்கு இந்த விருதை அறிவித்த நமது நாட்டிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்றும் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்