ஆஸ்கர் போட்டி: பங்கேற்கும் சூரரைப் போற்று திரைப்படம்..!

ஆஸ்கர் போட்டி: பங்கேற்கும் சூரரைப் போற்று திரைப்படம்..!

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மிரெட்டியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என்று அனைத்துப் பிரிவுகளிலும் ரசிகர்களை கவர்ந்தது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களில் சூரரைப்போற்று அபார சாதனையைப் படைத்தது.

இந்த நிலையில், தற்போது 'சூரரைப் போற்று' படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. மேலும், பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்