கிரிக்கெட்டில் கலக்கும் யோகிபாபு: வைரலாகும் வீடியோ

நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு யோகி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். இவர் ரஜினி, அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து விட்டார்.
இதனை தொடர்ந்து இவர் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. அத்துடன் பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நடிகரும், பிரபல தொகுப்பாளருமான மா.கா.பா ஆனந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது.
யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் அவர் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டையும் பாராட்டி வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை