மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தம்

மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தம்: கடுப்பான விஜய் ரசிகர்கள்
காரைக்காலில் தியேட்டரில் மாஸ்டர் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்- விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கு மாஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியான மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர்.
காரைக்காலில் இருக்கும் 2 தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியானது. முருகராமு தியேட்டரில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால் படம் திரையிடப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து அங்கேயே கூச்சலிட்டுள்ளனர். 
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட வேண்டாம் எனவும் தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்ய வெகு நேரம் ஆனதால், ரசிகர்கள் மீண்டும் கூச்சலிட தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 
இதையடுத்து தியேட்டர் நிர்வாகம், டிக்கெட் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி அவர்களை வெளியேற்றியது. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டர்களுக்கு சென்றவர்கள் உரிய பணம் கிடைக்காமல் புலம்புகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்