சூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிக்கிறீர்களா? – ஷிவாங்கியின் பதில் என்ன தெரியுமா…

சூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிக்கிறீர்களா? –  ஷிவாங்கியின் பதில் என்ன தெரியுமா…

இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவர் சூப்பர் சிங்கர் சாம் விஷாலை காதலிக்கிறீர்களா? அவரைப் பற்றி சொல்லுங்கள் என்ற கேள்விக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம்  ஷிவாங்கி பதிலளித்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், குக் வித் கோமாளி சீசன் தொடங்கப்பட்டது. கடந்த 2 நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்து தனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக இருக்கும் ஷிவாங்கியிடம் நெட்டிசன் ஒருவர், சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷாலை காதலிக்கிறீர்களா? அவரைப் பற்றி சொல்லுங்கள் என இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஷிவாங்கி, “அவர் என்னுடைய நெருங்கிய தோழர். எதுவாக இருந்தாலும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன். வெளியே சென்றாலும் அவரது நண்பர்களையும் அழைத்து செல்வேன். இன்ஸ்டாகிராமில் ஒரு வேளை அப்படி இருக்குமோ என்று கேட்கிறார்கள். இல்லவே இல்லை” என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு; தமிழ்நாட்டுக்கு நன்மையாக இருக்குமா?

  • நட்புறவு ஏற்படலாம்
  • காவிரி பிரச்னை முடிவுக்கு வரும்
  • காவிரி பிரச்னை தீவீரமடையும்
  • மாற்றம் எதுவும் இருக்காது

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்