மாஸ் ஆக உள்ள மாஸ்டர் படம் - நடிகர் சூரி பேட்டி!!

மதுரை தியேட்டரில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த நடிகர் சூரி, படம் மாஸ் ஆக உள்ளதாக கூறினார்.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று(13-01-2021) வெளியானது.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ரசிகர்களின் கொண்டாட்டம் குறைந்த அளவே இருந்தது. செல்லூர், ஆரப்பாளையம், கே.கே.நகர் அண்ணாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான திருநகர், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் முதற்காட்சிகள் காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. முக கவசம் அணிந்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மதுரையில் உள்ள கோபுரம் தியேட்டரில் இன்று(13-01-2021) அதிகாலை நடிகர் சூரி ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தியேட்டருக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாஸ்டர் படம் மாஸ் ஆக உள்ளது.
மேலும், கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எல்லா துறையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அதிலும் சினிமா துறை ரொம்பவும் பாதிக்கப்பட்டது.
தற்போது விஜய், சிம்பு படம் மூலம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. அதிக நாள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. ஒரு காலகட்டத்தில் நாம் வெளியே வந்துதான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் அரசு கூறும் கொரோனா தடுப்பு விதிகளையும் ரசிகர்களும், பொதுமக்களும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு