மாஸ்டர் படத்தை ரசிகர்களுடன் பார்த்த மகிழ்ந்த மாஸ்டர் படக்குழு!!

மாஸ்டர் படத்தை ரசிகர்களுடன் பார்த்த மகிழ்ந்த மாஸ்டர் படக்குழு!!
தமிழகம் முழுவதும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியானதையொட்டி, அதிகாலையிலேயே ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த மாஸ்டர் படக்குழுவினர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனதால், பொங்கல் பண்டிகையையொட்டி 
சென்னையில்  இன்று(13-01-2021) அதிகாலை 4 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

மேலும், சென்னை ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் படம் பார்த்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சாந்தனு உள்ளிட்டோர் படம் பார்த்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, லோகேஷ் கனகராஜ் படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொல்லுங்கள், சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்