தியேட்டருக்கு வந்தவர்களுக்கு மரக் கன்றுகள்: அசத்திய மும்பை விஜய் ரசிகர்கள்

 தியேட்டருக்கு வந்தவர்களுக்கு மரக் கன்றுகள்: அசத்திய மும்பை விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று தியேட்டர்களில் வெளியான நிலையில் படம் பார்க்க வந்தவர்களுக்கு சானிடைசர் மற்றும் மரக் கன்றுகள் வழங்கிய ரசிகர்களின் செயலால் மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டி, நடிகர் விஜய் நடித்தமாஸ்டர் திரைப்படம் இன்று (ஜன.13) வெளியானது. அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 50 சதவீதம் இருக்கைகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிதல், தொலைதூர இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மாஸ்டர் திரைப்படம் வெளியான நிலையில், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் மாஸ்டர் படம் வெளியான திரையரங்கு ஒன்றில், திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு சானிடைசர், மரக்கன்றுகளை ரசிகர்கள் வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்