இணையத்தில் கசிந்தது மாஸ்டர் படக் காட்சிகள்: யாரும் பகிர வேண்டாம் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்..!

சினிமா ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டமாக மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் என சினிமா பட்டாளமே நடித்துள்ளதால் மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததுள்ள நிலையில் இது குறித்து டுவீட்டரில் கருத்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு மாஸ்டர் படத்தை உங்களுக்கு வழங்கவிருக்கிறோம். நீங்கள் திரையரங்குகளில் படத்தை ரசிப்பதற்காகத்தான் அத்தனையும் செய்துள்ளோம். கசிய விடப்பட்டுள்ள மாஸ்டர் படக்காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம். ஒருநாள் காத்திருங்கள். அதன்பிறகு மாஸ்டர் படம் உங்களுக்கானது என்று பதிவிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு