தனுஷ் படத்திற்கு கர்ணன் என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என சிவாஜி சமூகநலப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தனுஷ் படத்திற்கு கர்ணன் என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என சிவாஜி சமூகநலப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது தனுஷை வைத்து கர்ணன் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்ததாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தின் தலைப்பு கர்ண்ன் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இப்படத்திற்கு கர்ணன் என்ற தலைப்பை வைக்ககூடாது என்று சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கர்ணன் என்ற தலைப்பை தனுஷ் படத்திற்கு வைக்க கூடாது என நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சிவாஜி சமூகநலப்பேரவை பொதுச்செயலாளர் கே.சந்திரசேகரன் இன்று நடிகர் தனுஷுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் “கர்ணன் என்றாலே அனைவருக்கும் நினைவில் நிற்பது நடிகர் திலகம் சிவாஜி தான்; தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.