சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திரைதுறையே ஸ்தம்பித்து போனது. இதற்கிடையில் அரசு தளர்வுகளை அறிவித்தவுடன் தியேட்டர்களில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான படங்களில் ஒன்று சந்தானம் நடிப்பில் உருவான பிஸ்கோத்.
இதற்கிடையில் ஏற்கெனவே சர்வர் சுந்தரம் ஓடி ஓடி உழைக்கனும் என பல படங்கள் சந்தானம் கைவசம் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் படப்பிடிப்புகளை தொடங்கலாம் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடிக்க தொடங்கினார்.
சமீபத்தில் அறிவித்ததுடன் போஸ்டர்களும் வெளியாகின. இந்த படத்தினை ஏ1 படத்தினை இயக்கிய ஜான்சன் கே இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படப்பிடிப்பு நிறைவின் போது கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்களும் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து படங்கள் நடிக்கும் சந்தானம் எப்படி அனைத்து படங்களையும் ரிலீஸ் செய்யப்போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பலரும் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.