மேற்கத்திய ரயில்வே நிர்வாகம் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை கவுரவித்துள்ளது.
மேற்கத்திய ரயில்வே நிர்வாகம் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை கவுரவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண உதவிகளை செய்து வருகிறார். உதவி செய்வதற்காகவே தனது சொத்துக்களை பத்து கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தா என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சோனு சூட்டிம் சேவைகளை கவுரவிக்கும் விதமாக, ஆந்திராவில் உள்ள சரத்சந்திர ஐஏஎஸ் அகாடமி, சரத்சந்திர கல்லூரி, சரத்சந்திர ஜுனியர் கல்லூரி ஆகியவற்றில், ஒரு துறைக்கு சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கத்திய ரயில்வே நிர்வாகமும் சோனு சூட்டை கவுரவப்படுத்தும் விதமாக அவரது பங்களிப்பு ரயில்வேயில் ஏதோ ஒருவகையில் இருக்கவேண்டும் என விரும்பியது.
இதனையடுத்து ரயில்வே நடைபாதைகளை கவனமின்றி கடக்கும் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விபரீதம் தெரியாமல் ரயில்வே ட்ராக்கை கடப்பதால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும், அவற்றை கடப்பதற்கு பாலங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பயணிகளுக்கு அறிவுறுத்தும் விதமாக சோனு சூட்டின் குரலை பதிவு செய்து ரயில் நிலையங்களில் ஒலிபரப்ப அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.