கோவிலில் முத்த காட்சி: சிக்கலில் நெட்ஃபிக்ஸ் தொடர்…

கோவிலில் முத்த காட்சி: சிக்கலில் நெட்ஃபிக்ஸ் தொடர்…

A Suitable Boy, என்ற நெட்ஃபிக்ஸ் தொடரில்தற்போது சிக்கலில் உள்ளது. இந்த தொடரில் வரும் சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதென இரண்டு நெட்ஃபிக்ஸ் அதிகாரிகள் மீது மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்த கவுரா திவாரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், நெட்ஃபிக்ஸ் அதிகாரிகள் மோனிகா ஷெர்கிம் (நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் துணை தலைவர்) மற்றும் அம்பிகா குரானாவுக்கு(ஸ்ட்ரீமிங் பொதுக் கொள்கை இயக்குநர்) எதிராக மத உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஒரு வீடியோவில் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வலைத் தொடரின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். 

இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் முத்த காட்சிகள் உண்மையான கோவிலில் படமாக்கப்பட்டுள்ளதா என இத்தொடர் இயக்குநர் மீரா நாயரிடம் உறுதி செய்ய மாநில காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

A Suitable Boy, தொடர் ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் ஒரு கோயிலுக்குள் முத்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இது தொடர்பாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் அதை ஆட்சேபிக்கத்தக்கதாக கருதுகிறேன். இது மத உணர்ச்சிகளை புண்படுத்தும் என்று நான் நினைக்கிறேன், ”என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்

மேலும் "இந்தத் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க நான் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார். 

அமைச்சரின் இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்