அல்லாவின் அருளால் திருமணம் கொண்டோம் : சனா கான்

அல்லாவின் அருளால் திருமணம் கொண்டோம் : சனா கான்

தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதன் பிறகு 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் குஜராத்தைச் சேர்ந்த முப்தி அனஸ் சயீத்தை மணந்தார். இதனையடுத்து தனது முதல் திருமண போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

கடந்த அக்டோபர் மாதத்தில் நடிப்பிலிருந்து விலகிய சனா கான், தனது திருமண புகைப்படங்களுடன் "அல்லாவின் அருளால் ஒருவரை ஒருவர் நேசித்தோம், அல்லாவின் அருளால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் திருமண போட்டோக்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில் புதுமண தம்பதியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்