அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட தடை...!

அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட தடை...!

நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்பான வழக்கில் புகைப்படங்களை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகை அமலாபாலுக்கும்- மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பவ்னீந்தர் சிங் என்பருக்கும், ராஜஸ்தானில் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக நிச்சம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அமலாபாலுக்கும், தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக நிச்சயம் செய்தபோது, நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பவ்னீந்தர் சிங் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். ஆனால், பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பவ்னீந்தர் சிங் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார். 

இதையடுத்து, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பவ்னீந்தர் சிங்கிடம் நஷ்ட ஈடு கேட்டு, சென்னை  உயர் நீதிமன்றத்தில் அமலா பால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாபாலின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னீந்தர் சிங்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அமலாபாலின் மனுவுக்கு டிசம்பர் 22ஆம் தேதிக்குள் பவ்னீந்தர் சிங் பதில் அளிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்