குற்றம் செய்யாதவ்வருக்கு 30 ஆண்டுகள் சிறை…. கார்த்திக் சுப்புராஜ் பரபரப்பு ட்வீட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குற்றம் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை… தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்… இவர்களுக்கு, தமிழக முதல்வரும், ஆளுநரும் நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம், தயவு செய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு