வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு மீண்டும் காயம்?

வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு மீண்டும் காயம்?

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 60வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். 

இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை கொண்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்புகள் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கியது. 

அதைத் தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஆக்‌ஷன் காட்சிக்கான படப்பிடிப்பின் போது அஜித்துக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்ததை அடுத்து அஜித் இன்னும் ஒரிரு வாரங்கள் ஓய்வு எடுத்தப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்