புற்றுநோயால் அவதிப்படும் தவசி... கைக்கொடுக்கும் சினிமா நட்சத்திரங்கள்…

புற்றுநோயால் அவதிப்படும் தவசி... கைக்கொடுக்கும் சினிமா நட்சத்திரங்கள்…

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் தனது சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து பலரும் நடிகர் தவசிக்கு உதவிகரம் நீட்டி வருகின்றனர்.

இவருக்கு நடிகர்கள் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ரூ.25,000 ரூபாயும், நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் ரூபாயும், நடிகர் சவுந்தரராஜா 10,000 ரூபாயும் வழங்கினர். 

இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செல்போன் மூலம் தவசியை தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு, தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உதவி உள்ளார். அவருடன் நடிகர் தவசிக்கு இயக்குனர் சமுத்திரகனி 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்