நயன்தாராவின் நெற்றிக்கண் பரிசு…!

நயன்தாராவின் நெற்றிக்கண் பரிசு…!

தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத முன்ணனி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அண்மையில் காதலர் விக்னேஷ்சிவன் பிறந்தநாளை கோவாவில் தன் குடும்ப உறுப்பினர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார்.


இந்த நிலையில் தற்போது நயந்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரில் நயந்தாரா ஒரு கதை சொல்வது போல் ஆரம்பித்து, அந்த கதைக்குள் படத்தின் கதையை இயக்குனர் ஒளித்து வைத்தது போல் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. படத்தில் நயந்தாரா பார்வையற்ற பெண்மணியாக வலம் வந்து சாகசம் புரிவார் என தெரிகிறது.

நெற்றிக்கண் படத்தின் இயக்குனர் இதற்கு முன் அவள் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதே போல் நெற்றிக்கண் படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்