காதல் திருமணம் தான் செய்வேன்.. அடம்பிடிக்கும் திரிஷா..!

காதல் திருமணம் தான் செய்வேன்.. அடம்பிடிக்கும் திரிஷா..!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. அவருக்கு வயது 37. ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்றுவிட்டது. 
தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் திரைப்பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளி வந்தன. ஆனால் ராணா வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், "நான் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன்" என திருமணம் குறித்து நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை "சிங்கிள்"ஆக இருப்பது பற்றி கவலையில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன் என நடிகை திரிஷா மனம் திறந்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்