விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெங்கட் பிரபு அதிரடி அறிவிப்பு....

விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெங்கட் பிரபு அதிரடி அறிவிப்பு....

நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது ரசிகர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்லிம்மாக மாறிய சிம்பு அதே கையோடு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை 38 நாட்களில் முடித்துக் கொடுத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார், இந்நிலையில் தீபாவளியன்று சிம்பு-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 லட்ச பார்வைகளை கடந்தது. இதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல்காலிக்-யின்  வாழ்த்துக்கள் விரைவில் மாநாடு பஸ்ட் லுக்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த அடுத்து அடுத்து சிம்பு படத்தின் அறிவிப்புகள் வெளிவருவதால்  அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்