லாஸ்லியா தந்தை மறைவுக்கு சேரப்பாவின் இரங்கல்…

லாஸ்லியா தந்தை மறைவுக்கு சேரப்பாவின் இரங்கல்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றவர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் இவரது தந்தை கனடாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இப்படி இருக்க லாஸ்லியாவின் சேரப்பா அவரின் தந்தை மறைவுக்கு ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “லாஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். 

இதற்கிடையில் பலரும் தந்தையின் இழப்பை லாஸ்லியா எப்படித் தாங்கப் போகிறாரோ. மகளின் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் இந்த நேரத்தில் அவருடன் இருந்து சந்தோஷப்பட மரியநேசன் இல்லையே.என்று தங்கள் வருத்தங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்