தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!

திரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!

ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் தமிழ் திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், இரு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் "ஒத்த செருப்பு" படத்துக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7 என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தில், ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார். இந்திய சினிமாவில் இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டி இருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் விருதுக்கு "ஒத்த செருப்பு" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. 

சென்னை மழை வெள்ளத்தில் வயதான தம்பதியினர் இடையே அளவில்லா அன்பு தான் இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதை. இதனால் சென்னையின் மழை நாட்களை மக்கள் முன் நிறுத்தி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது, இந்த படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்