மாஸ்க் அணியாமல் சென்ற நடிகை அதிதி பாலன்… அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மாஸ்க் அணியாமல் சென்ற நடிகை அதிதி பாலன்… அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மாஸ்க் அணியாமல் காரில் சென்ற அருவி பட நாயகி அதிதி பாலனுக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

அருவி படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி பாலன். அப்படத்தினை தொடர்ந்து மலையாளப் படத்தில் லிஜூ கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக படவெட்டு படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் கொடைக்கானல் ஏரிச்சாலையில் காரில் முகக்கவசம் அணியாமல் சென்ற அதிதி பாலனை அப்பகுதி சுகாதரத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர். 

அப்போது அதிதி பாலன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதனை தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் வந்த அதிதி பாலனுக்கு மருத்துவதுறையினர் அபராதம் விதித்து அனுப்பினர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்