அனிருத் பிறந்தநாளுக்கு தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்… ஷாக்கான ரசிகர்கள்

அனிருத் பிறந்தநாளுக்கு தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்… ஷாக்கான ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் தனுஷ்-அனிருத் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் 2015ம் ஆண்டுக்கு பிறகு தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை.

இந்நிலையில் தனுஷ்-அனிருத் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இன்று அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை தற்காலிகமாக டி-44 என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குநர், நாயகி, தொழிற்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்