ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார் வைரமுத்து… பிரபல சேனல் விஜே புகார்

ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார் வைரமுத்து… பிரபல சேனல் விஜே புகார்

வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

மீ டு விவகாரம் இந்தியாவில் வேகமாக பரவி கொண்டிருந்த போது பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சின்மயி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு பெண் வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

அதில், “அந்த பெண் தனக்கு நடந்தது குறித்து என்னிடம் கூறி 2 ஆண்டுகளாகிவிட்டது. அவரின் குடும்பத்தார் ஆதரிக்காததால் இவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கூறி அப்பெண்ணிடம் பேசிய மெசேஜ் ஸ்க்ரீன் ஸாட்களை வெளிட்டுள்ளார்.

அதில் அப்பெண் கூறுகையில்,”மீடூ இயக்கம் ஆரம்பத்த போதே இந்த சம்பவம் குறித்து உங்களிடம் கூற நினைத்தேன். என் பெயரை சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என் மாமனார், மாமியார் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் என் பெயரை பயன்படுத்த வேண்டாம். என்னை 17வது பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது நான் வைரமுத்துவிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். அப்போது அவர் கையெழுத்துடன் தனது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை. அதனால் கண்டுகொள்ளவில்லை.

அதன்பிறகு நான் பிரபல சேனலில் விஜேவாக வேலை செய்யத் தொடங்கினேன். அப்போது வைரமுத்து என்னை சந்தித்து தொடர்பு எண்ணை கேட்டார். நானும் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன். அவர் அதிக தொல்லை கொடுத்தார். அவரின் எண்ணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மவுண்ட் ரோடு அருகே உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு அடிக்கடி அழைத்தார். ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார். தன் கனவில் கண்ட தேவதை நான் என்று அவர் கூறினார்.

இதையடுத்து என் மீடியா பாஸ்களிடம் கூறி அவரின் மனைவியிடம் பேசி அவரை அடக்கி வைக்க வேண்டியாதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வைரமுத்து மீது மீ டு புகார்கள் அதிகரித்து வருவதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்