தள்ளிப்போகும் அண்ணாத்த ஆஜர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

தள்ளிப்போகும் அண்ணாத்த ஆஜர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம்அண்ணாத்த. கிராமத்து பின்னணியில் விவசாயத்துடன் தொடர்புடைய இந்த படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கின்றன. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் பாதுகாப்பு காரணமாக படப்பிடிப்பை ரஜினி தள்ளிப்போட வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடித்து இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்க தாமதம் ஏற்படவுள்ள நிலையில் அண்ணாத்த படம் தமிழ் புத்தாண்டு அல்ல கொடைவிடுமுறைக்கு தான் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்