உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட… சிறையில் மோதிக்கொள்ளும் நடிகைகள்…

உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட… சிறையில் மோதிக்கொள்ளும் நடிகைகள்…

போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அது தொடர்பாக நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். தற்போது ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகைகள் இரண்டு பேரும் மோதிக்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறையில் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நள்ளிரவில் புத்தகம் படிக்க ராகினி சஞ்சனாவை தூங்க விடாமல் இருப்பதாகவும், சஞ்சானா அதிகாலையில் யோகா செய்வதால் தனது தூக்கம் கெடுவதாக ராகினியும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தாலும் அவர்கள் தினமும் சண்டை போட்டு கொள்வதாக கூறப்படுகிறது. சில சமயங்களில் கைகலப்பும் ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமலாக்கத்துறையின் 5 நாட்கள் விசாரணைக்கு பிறகே இருவருக்கும் மத்தியில் இவ்வாறு மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதாகி சிறையில் உள்ள நடிகைகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்