சட்ட சபையில் கங்கனா…. வைரலாகும் தலைவி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ்…

சட்ட சபையில் கங்கனா…. வைரலாகும் தலைவி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ்…

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் படம் "தலைவி”. இப்படம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு சில தளர்வுகளுடன் படப்பிடிப்பு நடத்தந் அனுமதி வழங்கிய நிலையில் பல படங்களில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது கங்கனா தலைவி படத்தில் நடித்த புகைபடங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்