நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி பணமோசடி புகார்!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி பணமோசடி புகார்!

நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடியில் ஈடுப்பட்டதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீர தீர சூரன் படத்தின் போது நடிகர் சூரிக்கும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் சூரியை அவரது தந்தைக்கு அறிமுகம் செய்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் குடவாலாவிடம் சிறுச்சேரியில் நிலம் வாங்க சூரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுசேரியில் உள்ள நிலத்தை வாங்கித் தருவதாக கூறிய ரமேஷ் குடவாலா சூரியிடம் 3 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். ரமேஷ் குடவாலா தயாரிப்பில் தான் நடித்த படத்திற்கான சம்பளத்தில் 40 லட்ச ரூபாய் ஏற்கனவே உள்ள நிலையில் கூடுதலாக பணத்தை சூரி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த சொத்து வில்லங்கமானது என அறிந்த சூரி, அதை மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். ஆனாலும் ரமேஷ் குடவாலா பணத்தை திருப்பி தரவில்லை. இதனை தொடர்ந்து நடிகர் சூரி அவர் மீது காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவர் மீது புகார் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சூரி மனு அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில், “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது; பொய்யான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்