டிக் டிக் டிக் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ… பாராதிராஜாவுக்கு இளம் இயக்குநர் பதிலடி

டிக் டிக் டிக் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ… பாராதிராஜாவுக்கு இளம் இயக்குநர் பதிலடி

தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கியதில் இரண்டு படங்கள் ஆபாசப் படங்கள். 

இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவதாகவும் இரண்டாம் குத்து என்ற ஆபாசப் படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த படத்தின் டீஸரை நேற்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் ஆபாசமான வசனங்கள் காட்சிகள் உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும் இப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் இப்படத்தை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை பார்க்கவே கூசியது” என்று இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ” என்று பதிவிட்டுள்ளார்.

சந்தோஷின் இந்த பதில் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்