விஜயகாந்த் பூரண நலம்பெற பாரதிராஜா வாழ்த்து…

விஜயகாந்த் பூரண நலம்பெற பாரதிராஜா வாழ்த்து…

விஜயகாந்த் பூரண நலம்பெற இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்றிரவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று பிரபலங்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் வாழ்த்துகளை பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இயக்குநர் பாரதிராஜா விஜயகாந்த் பூரண நலம்பெற திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில்,”நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு,மிகச் சிறந்த மனிதர்.அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. அவர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து விரைவில். வீடு திரும்ப பிரார்த்திப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்