சத்தமே இல்லாமல் ஸ்டார்டான வலிமை பட படப்பிடிப்பு…

சத்தமே இல்லாமல் ஸ்டார்டான வலிமை பட படப்பிடிப்பு…

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து ஹெச்.வினோத்-அஜித் கூட்டணியில் அடுத்ததாக உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தையும் போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமா நிறுத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னர் சென்னயில் பிரம்மாண்டமான செட் அமைத்து ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் சுமார் 60 % படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் தமிழக அரசு கொரோனா தளர்வுகளில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதனையடுத்து வலிமை படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இதனிடையில் நேற்று (செப்.23) வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் அஜித் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் வலிமை படத்திற்கான சிறுசிறு காட்சிகள் படமாக்கப்பட்டது.

விரைவில் அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு சென்னையிலேயே அரங்குகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்