தனது வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ராக்…

தனது வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ராக்…

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது தனது வீட்டு கேட் திறக்காததால் அதை உடைத்துள்ளார்.

WWE மல்யுத்த வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் பாஸ்ட் ஆண்ட் ப்யூரியஸ், ஜூமாஞ்ஜி, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடைந்த தனது வீட்டின் கேட்டின் வீடியோவை பதிவிட்டு, படப்பிடிப்புக்கு செல்லும்போது கேட் திறக்காததால் அதனை உடைத்து தள்ளிவிட்டு வெளியேறினேன் என குறிப்பிட்டுள்ளார்.

கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை என்றும் ஹைட்ராலிக் சிஸ்டம் மின்சாரம் இல்லை என்றாலும் வேலை செய்யும் என்று கூறிய அவர் ஆனாலும் இந்தமுறை வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் தனக்காக நூற்றுக்கணக்கானோர் காத்துக் கொண்டிருந்ததால் என்னால் காத்துக்கொடிருக்க முடியவில்லை. அதனால் கேட்டை உடைத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். 

அதன்பிறகு அங்கு வந்த வெல்டிங்பணியாளர்கள் கேட்டை சரிசெய்யும் வீடியோவையும் ராக் பதிவிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்