அனுராக் மீது #MeToo புகார்… ஆதரவுக்கு வந்த முன்னாள் மனைவி…

அனுராக் மீது #MeToo புகார்… ஆதரவுக்கு வந்த முன்னாள் மனைவி…

அனுராக் காஷ்யப் மீதான மீடூ குற்றச்சாட்டுகளுக்கு அவரது முன்னாள் மனைவி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் மறுத்தார்.

அவருக்கு ஆதரவாக இயக்குநர்கள் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அனுராக் கஷ்யப்பின் முன்னாள் மனைவியான கல்கி கொச்சிலின் அனுராக்குக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட கடிதத்தில், “இந்த சமூக ஊடகக் கூத்து உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அனுராக். உங்கள் திரைக்கதைகளில் பெண்களின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்முறை வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மைக்காகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். இவற்றுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலும் என்னை உங்களுக்குச் சரிசமமாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். நமது விவாகரத்துக்கு பிறகும் எனது கண்ணியத்துக்காகத் துணை நின்றீர்கள், நாம் ஒன்று சேரும் முன்னரே ஒரு பணிச் சூழலில் நான் பாதுகாப்பின்றி உணர்ந்தபோது என்னை நீங்கள் ஆதரித்தீர்கள்.

யாரும் யாரையும் அவதூறு பேசும், வினோத காலகட்டம் இது. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பெய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான, அவருப்பான செயலாகும்.

வலிமையாக இருங்கள். நீங்கள் செய்து வரும் வேலையைத் தொடருங்கள்” என்று கல்கி கொச்சிலின் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்