மீண்டும் மீடூ சர்ச்சை? நடிகை கஸ்தூரி கருத்து…

மீண்டும் மீடூ சர்ச்சை? நடிகை கஸ்தூரி கருத்து…

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியிருந்தார். பாயல் கோஷின் பாலியல் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார். 

இதனையடுத்து மீண்டும் மீடூவைப் போல திரைத் துறையில் பலரை தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பேச வைத்திருக்கிறது. அத்துடன் தங்கள் கருத்துகளுடன் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் நடிகை பாயல் செய்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “சட்ட பார்வை: உறுதியான அல்லது உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலாது. ஆனால் அவை சம்பந்தப்பட்ட பெயர்களில் ஒன்று அல்லது அனைத்தையும் அழிக்கக்கூடும்” என்று தெரிவித்திருந்தார்.

கஸ்தூரியின் இந்த ட்வீட்டிற்கு ஒருவர், “உங்களுக்கு நெருக்கமானவர் இதேப்போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டாலும் நீங்கள் இதே மாதிரி தான் சட்ட பேசிக் கொண்டிருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, “இது மாதிரியான அனுபவம் எனக்கே ஏற்பட்டுள்ளது. மூடிய கதவுகளுக்குப் பின்னால்…“எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு யாரால் அப்படிப்பட்ட கசப்பான அனுபவம் ஏற்பட்டது என்பது பற்றி கஸ்தூரி வெளிப்படையாகக் கூறவில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்