நாட்டின் ஒரே நம்பிக்கை… நடிகர் சூர்யாவின் வைரல் ட்வீட்

நாட்டின் ஒரே நம்பிக்கை… நடிகர் சூர்யாவின் வைரல் ட்வீட்

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த அறிக்கையில் கொரோனா அச்சம் காரணமாக, நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என கூறப்பட்டிருந்தது. 

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

அத்துடன் "பொது விவகாரங்கள் குறித்து விமர்ச்சிக்கும் போது கவனம் தேவை என்றும், நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது" என்றும் நீதிபதிகள் நடிகை சூர்யாவுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை தொடந்து நடிகர் சூர்யா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நீதித்துறையின் பெருந்தன்மை நெகிழச்செய்துள்ளது. நான் நீதித்துறை மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன். நமது அரசியல் சாஸன உரிமைகளை உயர்த்திப்பிடிக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமும் நீதியும் எனக்கு உத்வேகமூட்டியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்