தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி…

தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி…

தமிழக அரசு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்காக நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சமீபத்தில் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

அந்தவகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்