விஜய்யின் “வேட்டைகாரன்” பட இயக்குநர் பாபு சிவன் மறைவு…

விஜய்யின் “வேட்டைகாரன்” பட இயக்குநர் பாபு சிவன் மறைவு…

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தின் இயக்குநர் பாபு சிவன் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

கடந்த 2009ம் ஆண்டு விஜய்-அனுஷ்கா நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தினை இயக்கியவர் பாபு சிவன். இவர் விஜய்யின் குருவி, பைரவா ஆகிய படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். மேலும் இவர் இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

வேட்டைக்காரன் படத்தினை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்பு இல்லாததால் கடந்த ஆண்டு டிவி சீரியல் ஒன்றை இயக்கினார். இதற்கிடையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாபு சிவன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். 

இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்