சோனு சூட்டிடம் பாஜக எம்எல்ஏ சீட்டு கேட்ட ரசிகர்… சோனு சூட் பதிலடி

நடிகர் சோனு சூட்டிடம் பீகார் தேர்தலில் பாஜகவில் எம் எல் ஏ சீட்டு வாங்கிக் கொடுக்கும்படி ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பஸ், ரயில், விமானங்கள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு ரசிகர் சோனு சூட்டிடம் வரவுள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏ சீட்டு வாங்கிக்கொடுக்கும் படி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு சோனு சூட், “நான் பஸ், ரயில், விமானங்களுக்குத்தான் டிக்கெட் ஏற்பாடு செய்ய முடியும். அரசியல் கட்சிகளில் எப்படி சீட்டு வாங்கிக் கொடுப்பது என்று எனக்கு தெரியாது என்று பதிவிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு